பூவுக்கு அரும்பு மொட்டு ;தேங்காய்க்கு அரும்பு  குரும்பை ;காதலுக்கு அரும்பு உன்மீதுஎண்ணம்
மான் போல் துள்ளி குதித்த மனமே
இன்று சிலை போல் நின்றதேனோ
கொடி போல் படரும் நினைவே
இன்று கொடியிடை கண்டு
நினைவு தப்பியதேனோ                                                                              
கருவிழி வழியே பிம்பம் பதிந்தோட
நிதர்சனத்தை மறந்ததேனோ
இதுதான் காதல் அரும்பிய கனமோ
மனம் விட்டு மனம் ஏங்கி
மனதோடு மனம் நாட
இருமனமும் ஒரு மனதாக இணையும்
மனப்பெயர்ப்பு தான் காதலா?
முடிந்தால் காதல் செய் முடியாது விட்டாலும் காதல் செய்



அரும்பும் சத்தம்..
மொட்டு அரும்பும் சத்தம்..
மொட்டு அரும்பும் சத்தம்...

என் இமை மீது,


உன் இதழ் யுத்தம்..!
நீ எப்போது திரும்புவாய்..? 
நம் பெயரை எழுதி வைத்த மரத்தில்,
அன்று முதல் இலையுதிர்காலம்...
நீ எப்போது திரும்புவாய்..?
உதிர்ந்த இலைகளும், மலர..!
மதி கேட்டு தாறுமாறாக
சுற்றி திரிந்த என்னை
நட்பு என்னும்
பாசக்கயிட்ரால் காட்டி விட்டாய்
எனது வாழ்வில் உனது நட்பு
எனும் பயணம் தொடர வேண்டும்
என்று இறைவனிடம் மடி ஏந்துகிறேன்
நான்!!!.

நீ இல்லாத என் நாட்கள் கிழித்தெறிந்த
காலண்டராய் கழிந்து கொண்டே இருக்கின்றன...
குளிரில் நடுங்கும் என் துவண்ட மேனியோ
இதுவரை உன் அணைப்பினை உணர்ந்ததே இல்லை...!

முத்தம் கேட்டேன்
சரி என்றாய்
ஒரு பட்டாம் பூச்சி
சிறகு மடிப்பது போல்
இமை மூடினாய்
நான்
முத்தம் மறந்து
முகம் பார்த்துக் கொண்டிருந்தேன்....

*************************************


இன்றைக்கான

முத்தத்தை
எண்ணிக்கையில் சொன்னாய்
எழுதப்படிக்கத் தெரியாதவன்
எண்ணத் தெரியாமலே
கொடுத்துக் கொண்டேயிருக்கிறேன்
************************************

உதடும்

உதடு சார்ந்ததும்
முத்தத் திணை.....
********************


குளித்துவிட்டு

ஈரமாய் வந்தாய்
இறுக்கி அணைத்து
முத்தமிட்டேன்
மொத்த ஈரமும் ஆவியாகி
அன்றே
மழையாய் பெய்தது.......
காதலுக்குக் கண்ணில்லை! 
காகிதத்தில் கவியெழுதிக்
காதல் சொன்னேன்!
முழுதாகப் படித்து முடித்து
"முட்டாள்" என்றாய்!

கைக்குட்டையில் இதயம் வரைந்து

கையில் தந்தேன்!
குப்பையிலே எறிந்துவிட்டு
"குட்பை" என்றாய்!

நெஞ்சமெல்லாம் நீதான்

என நெருங்கிச் சொன்னேன்!
நேற்று பார்த்த படத்தில்
வந்த வசனம் என்றாய்!

கண்ணாய் உனைக் காப்பேன்

என கலங்கிச் சொன்னேன்!
நாய் வளர்ப்பதில் நாட்டமில்லை
என்று நகர்ந்து சென்றாய்!

மிருதுவான உணர்வுகளை

மின்னஞ்சல் செய்தேன்!
மீசைக்கார மாமனனுப்பி
மிரட்டச் செய்தாய்!

"காலமெல்லாம் காத்திருப்பேன்"

எனக் காதில் சொன்னேன்!
காவல்துறை கதவு தட்டும்
எனக் கத்திச் சொன்னாய்!

கருணை காட்டவேண்டுமென்று

கனிவாய் கேட்டேன்!
கருனைக்கிழங்கைக் கையிலெடுத்துப்
பார்த்துக்கொள் என்றாய்!

என்ன செய்ய வேண்டும் எனைப்

பிடிப்பதற்கு என்றேன்!
ஏற்கனவே பிடித்துவிட்டது உனக்குப்
பைத்தியம் என்றாய்!

இறுதிவரை இணங்க மறுத்தால்

இறப்பேன் என்றேன்!
இயன்றவரை உதவுகின்றேன்
இன்றே இற என்றாய்!

கடைக்கண் திறக்காதா

காதல்? என்றேன்!
காதலுக்குக் கண்ணில்லை
எனக் கணக்காய் முடித்தாய்!
நினைவால் நினைவற்று போவேனோ....? 
உன்னை நினைத்து நினைத்து
என் நினைவற்று போகும் தருணம்
மிக அருகினில் தான் பெண்ணே ....!
நேற்றுவரை காத்திருந்தேன்
இன்றும் காத்திருக்கிறேன்
நாளையும் உன்னை நோக்கியே காத்திருப்பேன்

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola