இப்போதெல்லாம் உன்னை நினைக்கும் போது
எனக்கு கவிதைகள் வருவதில்லை
கண்ணீர்தான் வருகிறது - ஏனென்றால்
நீ எனக்குச் செய்த கொடுமைகள் அவ்வளவு.

உயிர் கொடுப்பாய்
என்று எண்ணியிருந்தேன் - ஆனால்
உயிரை எடுப்பாய்
என்பதை இப்போதுதான்  - நான்
புரிந்து கொண்டேன்

 ஆறிய காயங்கள்...! ஆறாத வடுக்கள்...!
காதலியே...
நீ தந்த முத்தமும்...
அணைப்பு சுகமும்...
வெளிச்சத்தில்
மறந்திருந்தாலும்...
இருட்டுக்குத் தெரியும்
நம் அந்தரங்கம்..!

வாங்கித் தந்த பூக்கள்

வாடிப் போனாலும்...
வாசனைக்குத் தெரியும்
நாம் பூத்திருந்த காலம்..!

நனைத்துவிட்ட மழையை

கோடை மறக்கச் செய்தாலும்...
ஒதுங்கிய கோவிலின்
வாயிலுக்குத் தெரியும்
நாம் நனைந்த நாட்கள்..!

திரையரங்குகளில்

படங்கள் மாறியிருந்தாலும்...
நாற்காலிகளுக்குத் தெரியும்
நாம் மெய் மறந்த நேரங்கள்..!

அரங்கத்தில் வந்து விட்ட

நம் காதலும்...
நான் இன்றி நடந்த
உன் மணவாழ்க்கை துவக்கமும்
உன் மரணமும்...

நொறுங்கிப்போன என் இதயமும்

காலம் காயத்தை ஆற்றியது..!
ஆனால் வடுக்கள்...

இனி யாரிடமும் காட்டி...

பெருமைபட்டுக் கொள்ள
முடியாது என்றாலும்...
நீ கொடுத்த ஒற்றை ரோஜா...
காய்ந்து, கசங்கி...
என்னிடம் பத்திரமாய்,
ரகசியமாய்...
வலிக்கின்றன அதன் ரணங்கள்..!
ஊருக்குத் தெரியாதிருந்தாலும்
உள்ளுக்குள் அழுகை இருக்கும்..!
விருப்பம் இல்லை  
என் காதலை சொல்ல விருப்பம் இல்லை
என் என்றால்
என்னை யாரும் காதலிக்கவில்லை
பெண்ணே.. 
கிறுக்கல்களும்
கவிதையாயின
நீ என்னை காதலித்த பொழுது ...
கவிதைகளும்
கிருக்கல்கலாயின
நீ என்னை ஏமாற்றிய போது...


கண்கள் கலங்க ஒரு கல்யாணம்... 
கல்யாண விருந்து தான்... - ஆனால்,
கை நனைக்க முடியவில்லை,,,
கண்கள் தான் நனைந்தது... - காரணம்
கல்யாணம் என் காதலிக்கு....!!! 
காதல் மழை.....
காதலியின் பிரிவுக்காக
கண்கள் சிந்திய "கண்ணீர்த்துளிகள்"...... 
இறைவன்
புல்லின் நுனியில்
வெள்ளை பணியை
விதைத்தவன்
யாரோ
அவனே என்
இதயக் கூட்டில்
கண்ணீர் கடலில்
கரைதல் கண்டேன்
உன்னாலே.... 
எந்த இசையும்
பிடிக்கவில்லை,
உன் குரலை
கேட்ட பின்பு.. .
எந்த சுவையும்
பிடிக்கவில்லை
உன் இதழை
சுவைத்த பின்பு...
எந்த பெயரும்
பிடிக்கவில்லை
உன் பெயரை
கேட்ட பின்பு...
எந்த பெண்ணையும்
பிடிக்கவில்லை
உன்னை
பார்த்த பின்பு...
காதலே...
பிடிக்கவில்லை
"நீ"

ஏமாற்றிய பின்பு...?
வாழ்க்கை  
திரும்பும் இடமெங்கும்
திருப்பங்கள்
எங்கு நோக்கினாலும்
எதிர்பாராத பதில்கள்
ஆனாலும் கேள்விக்குறிகளாய்தான்
நீள்கிறது இந்த வாழ்க்கை....!!!

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola